S.Renuka / 2026 மார்ச் 08 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian) மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் அடுத்தடுத்த அறிக்கைகள் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வளைகுடா நாடுகள் மீதான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் துபாய் விமான நிலையம் மற்றும் எண்ணெய் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழலில், ஈரான் அதிபர் மன்னிப்பு கோரியுள்ளார். "எங்கள் மீது அந்த நாடுகளில் இருந்து தாக்குதல் நடத்தப்படாத வரை, இனி அண்டை நாடுகள் மீது நாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம்" என அவர் உறுதியளித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதியின் இந்த மன்னிப்பைத் தனது வெற்றியாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
சரணடைந்த ஈரான்: "அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதலால் ஈரான் தோற்கடிக்கப்பட்டு, தனது அண்டை நாடுகளிடம் சரணடைந்துள்ளது. இதற்காக மத்திய கிழக்கு நாடுகள் எனக்கு நன்றி தெரிவித்துள்ளன" என அவர் கூறியுள்ளார்.
ஈரானின் நடத்தையைச் சுட்டிக்காட்டி, இதுவரை இலக்காக இல்லாத புதிய பகுதிகள் மீது சனிக்கிழமை(07) அன்று (அமெரிக்க நேரப்படி) மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ட்ரம்பின் 'நிபந்தனையற்ற சரணடைவு' மிரட்டலை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. "அண்டை நாடுகளுடன் சமாதானம் பேணுவோமே தவிர, அமெரிக்காவிடம் ஒருபோதும் சரணடைய மாட்டோம்" என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
25 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026