2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மரணச் சடங்கிலும் ட்ரம்ப் எதிர்ப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 07 , மு.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்ஷின் மரணச் சடங்கு, அரசியல் வேற்றுமைகளைத் தாண்டி இடம்பெற்றிருந்தாலும், ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நடவடிக்கையொன்று, அவர் மீதான விமர்சனத்தை வழங்கியிருந்தது.

அரச மரணச் சடங்கில், தற்போதைய ஜனாதிபதி ட்ரம்ப்பும், உயிருடன் இருக்கும் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, தனக்கு முந்தைய ஜனாதிபதியான பராக் ஒபாமாவுக்கும் அவரது மனைவியான மிஷெல் ஒபாமாவுக்கும், அவர் கைலாகு கொடுத்தார். அவரது இந்தக் கைலாகே, வழக்கத்துக்கு மாறானதாக, விருப்பமின்றிக் காணப்பட்டது போன்று காணப்பட்டது.

ஆனால் அதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனுக்கோ அல்லது அவரது மனைவி ஹிலாரி கிளின்டனுக்கோ, கைலாகு கொடுப்பதற்கு, ஜனாதிபதி ட்ரம்ப் முயலவில்லை. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஹிலாரி கிளின்டனோடு கடுமையாக மோதிக்கொண்ட ஜனாதிபதி ட்ரம்ப், அதன் காரணமாகவே இவ்வாறு கைலாகு கொடுப்பதைத் தவிர்த்தார் என்று கருதப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X