2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மரியாவால் புவேர்ட்டோ றிக்கோவில் 3,000 பேர் பலியாகினர்

Editorial   / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் புவேர்ட்டோ றிக்கோவில், கடந்தாண்டு இறுதியில் தாக்கிய மரியா சூறாவளி காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, சுமார் 3,000 என, அப்பகுதிக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை காலமும் அவ்வெண்ணிக்கை, 64 என்றே, உத்தியோகபூர்வமாகக் காணப்பட்டது.

எனினும், அச்சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, அதைவிட மிக அதிகமென, ஊடகங்களும் செயற்பாட்டாளர்களும் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதையடுத்து, அது தொடர்பாக ஆராயுமாறு, ஆளுநரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, கடந்தாண்டு செப்டெம்பரில் மரியா தாக்கியதைத் தொடர்ந்து, இவ்வாண்டு பெப்ரவரி நடுப்பகுதி வரையிலான காலப்பகுதியில், மரியாவின் நேரடித் தாக்கத்தாலேயோ அல்லது மறைமுகத் தாக்கத்தாலேயோ, 2,975 பேர் உயிரிழந்தனர் என வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, எதிர்பார்க்கப்பட்டதை விட மிக அதிகமாகும். குறிப்பாக, ஐ.அமெரிக்காவின் அண்மைக்கால வரலாற்றில், மிக மோசமான சூறாவளியாகக் கருதப்படும் கத்ரினா சூறாவளி மூலமாக, 1,200 தொடக்கம் 1,800 வரையிலானோர் கொல்லப்பட்டிருந்தனர்.

கடுமையான சூறாவளியாக இது அமைந்திருந்ததோடு, சூறாவளிக்குப் பின்னரான மீட்புப் பணிகள் தொடர்பிலும் அதிக சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக, ஐ.அமெரிக்க மத்திய அரசாங்கம், போதுமான உதவிகளை வழங்கியிருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு, மாநில அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டு வந்தது. அவ்வாறான விமர்சனங்கள், இனிமேல் தொடர்ந்து அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X