Editorial / 2018 மே 22 , மு.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மலேஷியாவுக்கு, தற்போதைய நிலையில் 1 ட்ரில்லியன் றிங்கிற்றுக்கும் (251.70 பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) அதிகமான கடன் காணப்படுகிறது எனத் தெரிவித்த பிரதமர் மஹதீர் மொஹமட், நஜீப் ரஸாக் தலைமையிலான முன்னாள் அரசாங்கத்தின் மீது, அதற்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில், தனது சீடர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட நஜீப் ரஸாக்கைத் தோற்கடித்து, பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹதீர், முன்னைய அரசாங்கம் மீதான விமர்சனங்களை முன்வைத்து வருவதோடு, நஜீப் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைகளையும் துரிதப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று (21) கருத்துத் தெரிவித்த பிரதமர் மஹதீர், “நாட்டின் நிதித்துறை, துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு, தற்போது நாட்டின் கடன் நிலைமை, 1 ட்ரில்லியன் றிங்கிற்றுக்கும் அதிகமான நிலையில் காணப்படுவதை நபம் காண்கிறோம்.
“இவ்வாறான கடனை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை, இதற்கு முன்னர் எமக்குக் காணப்படவில்லை. இதற்கு முன்னர் நாம், 300 பில்லியன் றிங்கிற்றுக்கும் அதிகமான கடனை எதிர்கொண்டிருக்கவில்லை. ஆனால் தற்போது அது, 1 ட்ரில்லியன் றிங்கிற்றாக உயர்வடைந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதாக, பிரசாரக் காலத்தின் போது வாக்குறுதியளித்திருந்த மஹதீர், பதவிக்கு வந்த பின்னர், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை, 0 சதவீதமாக மாற்றுவதற்கான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதேபோல், எரிபொருட்களுக்கான மானியத்தைக் கொண்டுவருவதற்கும் அவர் வாக்குறுதியளித்திருந்த நிலையில், அதுவும் விரைவில் நடைமுறைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025