2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

மாணவனுடன் தகாத உறவில் இருந்த ஆசிரியை கைது

Freelancer   / 2024 மே 05 , பி.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் 11 வயது பாடசாலை மாணவனுடன் தகாத உறவில் இருந்த 24 வயதான ஆசிரியை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ரிவர் கிரெஸ்ட் தொடக்கப் பாடசாலையில் ஆசிரியையாக பணியாற்றி வந்த 24 வயதான மேடிசன் பெர்க்மேன், அதே பாடசாலையில் பயிலும் 11 வயது மாணவருடன் தகாத உறவில் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக தன்னிடம் பயிலும் மாணவருடன் மேடிசன் தினமும் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை அந்த மாணவரின் பெற்றோர் கவனித்து, மாணவரின் போனை சோதித்தபோது, இருவரும் ஆபாசமான குறுஞ்செய்திகளை பகிர்ந்து வந்தது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி ஆசிரியை மேடிசன் பெர்க்மேனை கைது செய்தனர்.

மேலும் மேடிசனின் கைப்பையில், அவருக்கும் மாணவருக்கும் இடையிலான தகாத உறவை விவரிக்கும் வகையில் கைப்பட எழுதிய குறிப்புகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வகுப்பறையில் உணவு இடைவேளை உள்ளிட்ட நேரங்களில் மாணவரிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் கைதான ஆசிரியைக்கு 25 ஆயிரம் டொலர் அபராத தொகையுடன் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், அவர் பாடசாலை வளாகத்தில் நுழையவோ, பள்ளி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. S

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X