2026 மே 09, சனிக்கிழமை

dd

மாணவர்களின் கதறல்களுக்கு மத்தியில் `ஸ்மார்ட் போன்களைத் ` தீயில் வீசிய ஆசிரியர்கள்

Ilango Bharathy   / 2022 பெப்ரவரி 28 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்களின்  ஸ்மார்ட் தொலைபேசிகளை அவர்கள் கண்முன்னே  ஆசிரியர்கள் தீயில் இட்டு எரித்த வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி  மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டதாகக் கூறும்  குறித்த வீடியோவில் ” மாணவர்கள் தமது தொலைபேசிகளை தீயில் போடாதீர்கள் என்று கதறி அழுவதும், ஆசிரியர்கள் அவற்றை கண்டுகொள்ளாமல் தீயில் வீசுவது போன்றும்” காணப்படுகின்றது.

எனினும் குறித்த சம்பவம் இந்தோனேசியாவில் எப்போது எங்கு இடம்பெற்றது என்பது குறித்த தகவல்  வெளியாகவில்லை.

இந்நிலையில் இச்சம்பவத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்ப்பு தெரிவித்தும், பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .