2024 மே 09, வியாழக்கிழமை

மாயமான சுகவீனத்தால் பாதிக்கப்பட்ட ஐ. அமெரிக்க இராஜதந்திரிகள்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 17 , பி.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் தமது இராஜதந்திரிகள், ஏனைய நிர்வாகப் பணியாளர்கள் பங்கெடுத்த தொடர்ச்சியான சுகாதாரச் சம்பவங்கள் குறித்து ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் விசாரிக்கின்றது.

மாயமான மூளை வியாதி தொடர்பான குணங்குறிகளை 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வெளிக்காட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது எவ்வாறு ஏற்பட்டது என விளக்கமளிக்கப்படாத போதும், பெரும்பாலும் மைக்ரோவேவ் கதிரியக்கத்தால் ஏற்பட்டிருக்கலாம் என ஐ. அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முதலில் 2016-17-ஆம் ஆண்டு காலப் பகுதியில் கியூபாவில் இது முதலில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

கியூபத் தலைநகர் ஹவானாவிலுள்ள ஐ. அமெரிக்க, கனேடிய இராஜதந்திரிகள் இவ்வாறான குணங்குறிகளை வெளிக்காட்டியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X