Freelancer / 2023 நவம்பர் 09 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாற்று பாலினத்தவரும் கத்தோலிக்க ஞானஸ்நானம் பெற வத்திக்கானின் கோட்பாட்டு அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களே ஞானப் பெற்றோராக இருந்தும் தமக்குத்தாமே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வழிவகுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் கத்தோலிக்க திருமணங்களில் சாட்சிகளாக இருக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோசப் நெக்ரி என்ற பாதிரியார் ஒருவர் கடந்த ஜூலை மாதம் 6 கேள்விகள் அடங்கிய ஒரு தொகுப்பை வத்திக்கானுக்கு அனுப்பியிருந்தார். அதில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்தும், அவர்களுக்கு ஞானஸ்நானம் வழங்குதல் குறித்தும் கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விகளுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் வத்திக்கானின் நம்பிக்கைக்கான கோட்பாட்டுத் துறை பதிலளித்துள்ளது. போப் பிரான்சிஸ் ஒப்புதலுடன் கூடிய மூன்று பக்க கடிதத்தை பிஷப் ஜோசப் நெக்ரிக்கு அனுப்பி வைத்தது.
அதில் மாற்று பாலினத்தவர் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோர் திருச்சபைகளில் ஞானஸ்நானம் பெறலாம் என்று ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பிக்கையில் எந்தவித மாற்றங்களோ அல்லது குழப்பங்களோ இருக்கக் கூடாது என்ற நிபந்தனையையும் வத்திக்கான் முன்வைத்துள்ளது.
12 minute ago
21 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
33 minute ago