Editorial / 2018 ஒக்டோபர் 30 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாலைதீவுகளில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஜனநாயக மாற்றத்தில், இந்தியாவின் பங்களிப்புக் காணப்பட்டது எனத் தெரிவித்த, அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மௌமூன் அப்துல் கயூம், மாலைதீவுகளில் ஏற்படுத்தப்படவுள்ள புதிய அரசாங்கம், இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கிச் செயற்படுமெனவும் உறுதிப்படுத்தினார்.
2008ஆம் ஆண்டு வரை, மாலைதீவுகளை ஆட்சிபுரிந்த கயூம், பின்னர் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர், சுமார் ஒரு மாதத்துக்கு முன்னரே, அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி அப்துல்லா யமீன், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியடைந்த பின்னரே, இவ்விடுதலை இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, மாலைதீவுகளுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற தேர்தலில், யமீனுக்கு ஏற்பட்ட தோல்வி, மாலைதீவுகளின் ஜனநாயகத்துக்குக் கிடைத்த முக்கியமான உந்து சக்தியாகக் கருதப்படும் நிலையிலேயே, இந்தியாவின் பங்களிப்பும் இதில் இருந்ததென அவர் தெரிவித்தார்.
யமீன் அரசாங்கத்துக்கு, கடுமையான அழுத்தத்தை வழங்கி, ஜனநாயகத்தை மீளக் கொண்டுவருவதற்கு, இந்தியா அழுத்தம் வழங்கியது அவர் தெரிவித்தார்.
இந்தியாவை, “நெருங்கியதும் மிகவும் நம்பத்தகுந்ததுமான தோழமை நாடு” என வர்ணித்த அவர், இந்தியாவின் உணர்வுகளை மதித்துச் செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாலைதீவுகளில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில், இப்ராஹிம் மொஹமட் சொலிஹ் வெற்றிபெற்றதோடு, எதிர்வரும் 17ஆம் திகதி, ஜனாதிபதியாக அவர் பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
38 minute ago
1 hours ago