2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

’’மிஸ் ஜப்பான்’’ பட்டத்தை திரும்ப அளித்து பெண்

Mithuna   / 2024 பெப்ரவரி 09 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஜனவரி 22 அன்று ஜப்பானில் நடைபெற்ற "மிஸ் ஜப்பான்" போட்டியில், கரோலினா ஷீனோ  எனும் 26 வயது இளம் பெண் பட்டம் வென்றார்.

உக்ரைன் நாட்டில் பிறந்த கரோலினா, தனது 5-வது வயதில் தாயாருடன் ஜப்பானில் குடி புகுந்தார். நகோயா பகுதியில் வளர்ந்த கரோலினா, அவரது மாற்றாந்தந்தையின் பெயரை இணைத்து கொண்டுள்ளார்.

உக்ரைனில் பிறந்திருந்தாலும், கரோலினா ஜப்பானிய மொழியில் சரளமாக எழுதவும் பேசவும் தெரிந்தவர். ஜப்பான் நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பதுடன் அவர் ஜப்பானிய பெண்ணை போன்றே இல்லை என்பதால் அழகி போட்டியில் அவருக்கு பிரதிநிதித்துவம் கிடைத்தது தவறு என ஒரு சாராரும், அயல்நாட்டை பூர்வீகமாக கொண்ட ஒரு பெண் ஜப்பானிய போட்டியில் வென்றது பாராட்டுக்குரியது என வேறொரு தரப்பினரும் இவரது வெற்றியை குறித்து கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ஷுகன் பன்ஷுன்  எனும் அந் நாட்டு பத்திரிகை ஒன்றில் கரோலினாவிற்கு ஒரு திருமணமான ஆணுடன் நட்பில் கடந்த உறவு இருந்ததாக செய்தி வெளிவந்தது.

இதை தொடர்ந்து தற்போது அழகி போட்டியை நடத்திய “மிஸ் ஜப்பான் சங்கம்”, பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட அந்த ஆண் திருமணமானவர் என முன்னரே அறிந்திருந்ததாகவும் அதை மறைத்த தவறை ஒப்பு கொண்ட கரோலினா தனது "மிஸ் ஜப்பான்" பட்டத்தை திரும்ப அளித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இது குறித்து கரோலினா, “என்னால் விளைந்த சிக்கல்களுக்கும், என்னை நம்பியவர்களை ஏமாற்ற நேர்ந்ததற்கும் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X