Editorial / 2018 ஒக்டோபர் 01 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்வு, சுனாமி ஆகியவற்றின் பின்னரான மீட்புப் பணிகளில் ஈடுபடுவதில், கடுமையான கஷ்டத்தை, மீட்புப் பணியாளர்கள் எதிர்கொண்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 832ஆக உயர்வடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கருதப்படும் சமூகங்களைத் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் நிலவுகின்றனவென, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை 7.5 றிக்டர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து, இவ்வனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.
பாலு என்ற நகரத்திலுள்ள ஹொட்டலொன்றும் கடைத்தொகுதியொன்றும் இடிந்து வீழ்ந்ததில், அதன் இடிபாடுகளுக்குள், டசின்கணக்கானோர் சிக்கியுள்ளனர் எனக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில், 6 மீற்றர்கள் வரையிலான உயரத்தைக் கொண்ட சுனாமி அலைகள் தாக்கியிருந்தன. எத்தனை பேர் சிக்கியிருக்கின்றனர் என்பது உறுதியாகக் கூறப்படாவிட்டாலும், சுமார் 60 பேர் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதுவரையான தகவல்களின் அடிப்படையில், சுமார் 10,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்காக அதிகரிக்குமென, இந்தோனேஷிய உப ஜனாதிபதி ஜூசுப் கல்லா எச்சரித்துள்ளார்.
குறிப்பாக, 300,000க்கும் மேற்பட்டோர் வசித்த டொங்கலா பகுதியையும், இப்பூமியதிர்ச்சியும் சுனாமியும் தாக்கியிருந்தது. ஆனால், அப்பகுதியிலுள்ள எதுவிதத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என அறிவிக்கப்படுகிறது. ஆகவே தான், எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற எதிர்வுகூறலை மேற்கொள்ள முடியாமலுள்ளது.
இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுக்கு அண்மையில், 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட பாரிய பூமியதிர்வு, அதைத் தொடர்ந்தான சுனாமி ஆகியவற்றால், இந்து சமுத்திரத்திலுள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. இந்தோனேஷியாவின் உயிரிழந்த 120,000க்கும் மேற்பட்டோரோடு, 13 நாடுகளில் 226,000 பேர் உயிரிழந்திருந்தனர். அத்தகையை வீச்சத்தை இச்சுனாமி கொண்டிருக்காவிட்டாலும் கூட, அதை ஞாபகப்படுத்துவதாக இது அமைந்திருந்தது.
41 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago