2025 ஒக்டோபர் 17, வெள்ளிக்கிழமை

மீண்டும் இணைந்த இஸ்ரேலிய பணயக்கைதி இணை

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 15 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிதாக விடுவிக்கப்பட்ட தனது ஆண் நண்பர் அவினடன் ஓருடன் இஸ்ரேலிய முன்னாள் பணயக்கைதி நோவா அர்கமனி திங்கட்கிழமை (13) மீள இணைந்துள்ளார்.

ஹமாஸின் 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி தாக்குதலில் அர்கமனி மோட்டார் சைக்கிளின் பின்புறமிருந்து ஓரை நோக்கி அழுவது மிகுந்த தாக்கமுடையதாய் இருந்திருந்தது.

இஸ்ரேலிய சிறப்புப் படைகளால் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் வேறு மூன்று பணயக்கைதிகளுடன் அர்கமனி மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனது பெற்றோரை கட்டியணைத்து முத்தமிட்ட ஓர், பின்னர் அறையொன்றுக்குள் அர்கமனியைக் கண்டத்துடன் இருவரும் ஒருவரையொருவர் அணைத்து முத்தமிட்டிருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .