2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மீண்டும் எர்டோகன்...

Ilango Bharathy   / 2023 மே 30 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 14-ஆம் திகதி நடைபெற்றது.

 அந்நாட்டில் கடந்த பெப்ரவரியில்  ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது அரசின் நிவாரணப் பணிகள் மந்தநிலையில் நடைபெற்றதாக எழுந்த அதிருப்தியின் காரணமாக எா்டோகனுக்கு வெறும் 35.3 சதவீத வாக்குகளே கிடைக்கும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகின. தேர்தல் முடிவுகள் வெளியானபோது கணிப்புகளைப் பொய்யாக்கி ஜனாதிபதி எர்டோகன் 49.5 சதவீத வாக்குகளைப் பெற்றார். 

துருக்கி அரசியலமைப்புச் சட்டப்படி, 50 சதவீத வாக்குகள் பெற்றால்தான் ஜனாதிபதி முடியும் என்பதால், 2-ஆம் கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

2-ஆம் கட்ட தோ்தலில் சுமார் 52 சதவீதம் வாக்குகள் பெற்று எர்டோகன் முன்னிலை வகிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளர் கெமால் கிளிச்தாருக்குக்கு 47 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன.

வெற்றி உறுதியானதையடுத்து தலைநகா் இஸ்தான்புலில் ஆதரவாளர்களிடையே பேசிய ஜனாதிபதி எர் டோகன், ‘மேலும் 5 ஆண்டுகளுக்கு நாட்டை ஆளும் பெரும் வாய்ப்பை எனக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .