Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2023 மே 07 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவின் புதிய மன்னராக 74 வயதான 3ஆம் சார்லஸ்சுக்கு நேற்றைய தினம் (06) முடிசூட்டப்பட்டது.
லண்டனில் தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள west minster abbeyயில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இம்முடிசூட்டு விழாவில் உலகின் முன்னணி பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
இருப்பினும் மன்னர் சார்லஸ்சின் இரண்டாவது மகனான ஹாரியின் மனைவி ‘மேகன் மார்கல்‘ விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
அரசக் குடும்பத்துடன் மோதல் ஏற்பட்டு இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அரச கடமைகளை விட்டுவிட்டு தங்கள் குழந்தைகளுடன் 2020ஆம் ஆண்டில் அரண்மனையை விட்டு வெளியேறி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியேறினர்.
இதற்கு முக்கிய காரணம் இளவரசர் ஹாரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் மோதலில் ஈடுபட்டதாகவும், ஒரு முறை சண்டையின் போது வில்லியம் தன்னை காலரைப் பிடித்து அடித்து தரையில் தள்ளினார் எனவும் ஹாரி வெளிப்படையாகப் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனது கணவருக்கு அரச குடும்பத்தில் ஏற்பட்ட அவமதிப்பை மனதில் வைத்து தான் மேகன் மற்றும் குழந்தைகள் முடிசூட்டு நிகழ்வில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago
3 hours ago