Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முதலாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில், எந்தவித அரசியல் அனுபவுமில்லாத நகைச்சுவை நடிகரான வொலடீமர் ஸிலென்ஸ்கி முன்னிலை பெற்றுள்ளார்.
நேற்று (01) காலை வரையில் அரைவாசிக்கும் மேலான அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், தற்போதைய ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவை விட பிரபலமான தொலைக்காட்சித் தொடரொன்றில் ஜனாதிபதியாக நடித்திருந்த வொலடீமர் ஸிலென்ஸ்கி குறிப்பிடத்தக்களவு முன்னிலையில் இருக்கின்றார்.
அந்தவகையில், முதலாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் 39 வேட்பாளர்கள் காணப்பட்டிருந்த நிலையில், இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவும், வொலடீமர் ஸிலென்ஸ்கியும் போட்டியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், அறியப்படாதவர் என்றும், பெரியளவு கொள்கை விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும் வொலடீமர் ஸிலென்ஸ்கி விமர்சிக்கப்படுகின்ற நிலையில், நேற்று முன்தின தனது வெற்றியுரையின்போதும், இரண்டாவது சுற்று ஜனாதிபதித் தேர்தலில் வென்று ஜனாதிபதியானால் என்ன செய்வேன் என்பதை அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை.
எவ்வாறாயினும், ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோவும், வொலடீமர் ஸிலென்ஸ்கியும் உறுதியாக மேற்குலகை எதிர்கொள்ளவே விரும்புகின்றனர் என்பதுடன், இரண்டு பேரும் உக்ரேனை ரஷ்யாவின் திசை நோக்கி நகர்த்த விரும்பவில்லை.
50.4 சதவீதமான வாக்குகள் இலங்கை நேரப்படி நேற்றுக் காலை 11.30 மணி வரை எண்ணப்பட்டுள்ள நிலையில், வொலடீமர் ஸிலென்ஸ்கி 30.2 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக மத்திய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 16.6 சதவீதமான வாக்குகளை ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ பெற்றுள்ளதுடன், முன்னாள் பிரதமர் யூலியா டைமோஷென்கோ 13.1 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.
20 minute ago
40 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
40 minute ago
1 hours ago