Ilango Bharathy / 2022 ஜனவரி 26 , பி.ப. 12:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முதியோர்களைக் குறிவைத்து கும்பலொன்று பணமோசடியில் ஈடுபட்டுவந்துள்ள சம்பவம், சுவிட்ஸர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் முதியவர்களைக் குறிவைத்து மர்மக் கும்பலொன்று தம்மை பொலிஸார் என அறிமுகப்படுத்தி, அவர்களிடம் ”நீங்கள் போக்குவரத்து விதியை மீறி விட்டீர்கள் என்று கூறி அபராதம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தி பணமோசடி செய்து வந்துள்ளமை அண்மையில் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி வரும் அந்நாட்டு பொலிஸார் குறித்த மோசடிக் கும்பலினால் இதுவரை சுமார் 8,00,000 சுவிஸ் பிராங்குகள் ஏமாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தாங்கள் இவ்வாறு தொலைபேசியில் பணம் எதுவும் கேட்பதில்லை என்றும், யாரேனும் இவ்வாறு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பணம் தருமாறு கூறினால் உடனே பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
45 minute ago
50 minute ago