Editorial / 2019 ஜூன் 12 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதியும் மறைந்த பெனாசீர் புட்டோவின் கணவருமான ஆசிப் அலி சர்தாரி, 4,400 மில்லியன் ரூபாய் அளவிலான போலி பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் ஜனாதிபதியாக, 2008ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரை பதவி வகித்த சர்தாரி. மனைவியும் முன்னாள் பிரதமருமான பெனாசீர் புட்டோ மறைந்த பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவர் பொறுப்பு வகித்து வருகிறார்.
சர்தாரி மற்றும் சகோதரி மற்றும் தர்பூரின் தனியார் நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு போலி கணக்குகள் மூலமாக 4000 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தேசிய பொறுப்புடைமை பிரிவு வழக்குத் தொடர்ந்தது.
இந்நிலையில், சர்தாரியும், சகோதரி தல்பூரும் தாக்கல் செய்த ஜாமின் மனுவை, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (10) நிராகரித்தது.
அதைத் தொடர்ந்து சர்தாரியின் வீட்டில் வைத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
8 minute ago
16 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
16 minute ago