2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி

Mithuna   / 2024 பெப்ரவரி 07 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு சிலி. இந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா. பெரும் பணக்காரரான இவர் 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி ஜனாதிபதியாக பதவி வகித்தார்.

இந்நிலையில், அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா செவ்வாய்க்கிழமை (06) ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார். அந்த ஹெலிகாப்டரில் ஜெபஸ்டின் உள்பட மொத்தம் 4 பேர் பயணித்தனர்.

லகோ ரங்கொ அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்தார். ஹெலிகாப்டரில் பயணித்த எஞ்சிய 3 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X