S.Renuka / 2026 மார்ச் 19 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் மூதாட்டியை பயமுறுத்தியதாக, உலகிலேயே முதன்முறையாக ரோபோ ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் மக்காவ் நகரில், கடந்த 12ஆம் திகதி இரவு, 70 வயது மூதாட்டி ஒருவர் வீதியில் மொபைல் போனில் பேசியபடி நின்று கொண்டிருந்தார். திடீரென பின்னால் திரும்பிப் பார்த்தபோது, மனித உருவ ரோபோ மொடல் ஒன்று நெருக்கமாக நின்றிருந்தது.
இதைக் கண்டு பயத்தில் அலறிய அந்த மூதாட்டி, ரோபோவை நோக்கி கோபமாக திட்டியுள்ளார். 'உன்னால் என் இதயமே நின்று போனது' என அந்த மூதாட்டி திட்ட, பதிலுக்கு ரோபோவும் அவரிடம் ஏதோ பேசியுள்ளது.
இதனால் அங்கு கூட்டம் கூடவே பொலிஸார் விரைந்து சென்று, ரோபோவை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். ஒரு பொலிஸ் அதிகாரி ரோபோவின் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற வீடியோ வெளியாகியுள்ளது.
பின்னர் மூதாட்டியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். உடல் ரீதியாக காயம் ஏதும் இல்லை என்றாலும், பயத்தால் இரவு முழுதும் அங்கேயே தங்க வைக்கப்பட்டார்.
23 minute ago
55 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
55 minute ago
2 hours ago