2025 மே 14, புதன்கிழமை

மேகங்களில் மைக்ரோ பிளாஸ்டிக்

Freelancer   / 2023 ஒக்டோபர் 05 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் என அழைக்கப்படும் சிறு பிளாஸ்டிக் துணுக்குகள் வான் மேகங்களில் இருப்பதை முதல் முறையாக ஜப்பானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜப்பானிய விஞ்ஞானிகள், மேற்கு அமெரிக்காவின் நகர்ப்புறங்களை தாண்டிய பகுதிகளில் உள்ள வானில் 3000 அடிக்கு மேல் காற்றிலிருந்து மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்துள்ளார்கள். அவர்கள் சேகரித்த இடங்களில் எல்லாம் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருந்துள்ளது. பிளாஸ்டிக் பைகள், செயற்கை இழைகள் மற்றும் பெரிய பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் சிறு துகள்கள்  உடைந்து காலப்போக்கில் மேகத்தை சென்றடைந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

 மேகங்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருப்பது சுற்றுச்சூழலில்  விளைவுகளை ஏற்படுத்தும். இவை மேகத்தின் செயல்பாடுகளை மாற்றியமைக்கும் வாய்ப்புள்ளது. இதனால் வானிலை மற்றும் மழை பெய்வதில் கூட மாற்றம் உண்டாகலாம் ​என கருதுகிறார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .