Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 நவம்பர் 18 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டு சென்றார். கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை.
நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கு, ஞாயிற்றுக்கிழமை (17) சென்ற மோடியை, அந்நாட்டின் அமைச்சர் நேசாம் எசன்வோ விகே வரவேற்றார்.
இந்தியாவும், நைஜீரியாவும் பல துறைகளில் இணைந்து செயற்பட வேண்டும் என 2007இல் முடிவு செய்யப்பட்டது. அந்த நட்புறவை மேம்படுத்தும் பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபட்டார்.
மேலும், பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
இதையடுத்து, நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய தேசிய விருதான 'கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் வழங்கப்பட்டது.
விருதை பெற்ற பின் பிரதமர் மோடி கூறுகையில், “நைஜீரியாவின் மிக உயர்ந்த விருதை பணிவுடன் ஏற்றுக் கொண்டு, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
இதற்கு முன்னர் இந்த விருது கடந்த 1969ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணி எலிசபத்துக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .