2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மோடிக்குப் பிடித்த கிச்சடியைச் சமைத்தார் பிரதமர்

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 10 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் மோடிக்குப் பிடித்த உணவான கிச்சடியை நேற்றைய தினம்(09) அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் சமைத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுடன் அண்மையில் அவுஸ்திரேலியா மேற்கொண்ட புரிந்துணர்வு வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடும் வகையில்  இதனை அவர் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சமையல் முறையைப் பயன்படுத்தி பிரதமர் மோடிக்குப் பிடித்த கிச்சடியை அவர் தயாரித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .