2025 மே 02, வெள்ளிக்கிழமை

மோனாலிசா மீது கேக் பூசியவர் கைது

Freelancer   / 2022 மே 30 , பி.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூமி மீது கலைஞர்கள் போதிய கவனம் செலுத்தாதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மோனாலிசா ஓவியத்தை மூடியிருந்த கண்ணாடித் திரையில் கேக்கைத் தடவிய 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரான்ஸின் பரிஸில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த நபர் மனநல காப்பகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

“பூமியை அழிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். எல்லா கலைஞர்களும் பூமியைப் பற்றி சிந்தியுங்கள். அதனால்தான் இதைச் செய்தேன். கிரகத்தைப் பற்றி சிந்தியுங்கள்." என காப்பகத்தில் வைத்து அவர் பிரெஞ் மொழியில் கூறியுள்ளார். 

அருங்காட்சிய அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X