Editorial / 2025 டிசெம்பர் 07 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

வட அமெரிக்காவின் யுகோன் பகுதியில் 7 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.
வடஅமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமான அலாஸ்கா மற்றும் கனடா பிராந்தியத்திற்கு நடுவே அமைந்துள்ள யுகோன் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வகத்தின் தகவல்படி, நிலநடுக்கத்தின் மையப்பகுதி அலாஸ்காவின் ஜூனோவிற்கு வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், யுகோனில் உள்ள வைட்ஹார்ஸுக்கு மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குழுங்கின. பொதுமக்கள் பீதியில் தெருக்களில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் உணரப்பட்டதாக 911 அழைப்புகள் தங்களுக்கு வந்ததாக வைட்ஹார்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago