Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூடியூப் செனல் ஆரம்பித்த ரொனால்டோ, 90 நிமிடங்களில் 1 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர்.
கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள அவர், அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால் பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனை அவரிடம்தான் உள்ளது.
தன்னுடைய கால்பந்து வாழ்க்கையின் கடைசிகாலத்தில் இருக்கிறார் ரொனால்டோ. இந்நிலையில் இப்போது அவர் யூடியூப் செனல் ஒன்றைத் தொடங்கியுள்ளார். அதன் மூலம் அவர் இரசிகர்களுடன் தொடர்பில் இருக்கவுள்ளார்.
‘UR christiano’ என்ற பெயரில் செனல் தொடங்கிய அவர் அடுத்தடுத்து சில வீடியோக்களை பதிவேற்றினார். இந்நிலையில் அவர் செனல் ஆரம்பித்த 90 நிமிடங்களில் அவரை ஒரு மில்லியன் பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அதன் மூலம் சேனல் ஆரம்பித்த ஒன்றரை மணிநேரத்தில் யூடியூபின் கோல்டன் பட்டனை அவர் பெற்றுள்ளார்.
அதன் பின்னர் 12 மணி நேரத்தில் அவர் செனலின் சப்ஸ்க்ரைபர் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .