Ilango Bharathy / 2022 மார்ச் 06 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரகசிய அறையொன்றில் 2 பெட்டிகள் நிறைய காதல் கடிதங்கள் கண்டெடுக்கப்பட்ட விநோத சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜீனியா நகரில் `அன்னா பிரில்லாமேன்` என்ற பெண்ணொருவர் புதிதாக விலைக்கு வாங்கிய வீட்டிலிருந்தே இக் கடிதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டை சுத்தம் செய்யும் போதே அவ்வீட்டில் ஒரு ரகசிய அறை இருப்பதை அவர் பார்த்ததாகவும், அங்கு இரண்டு பெட்டிகள் நிறைய காதல் கடிதங்கள் இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ” பெட்டி-சூ என்ற பெண்ணுக்கு வேன்ஸ் என்ற நபர் இக்கடிதங்களை எழுதியுள்ளதாகவும்,அவை 70 ஆண்டுகள் பழமையானவை எனவும், அக் கடிதத்தில் இலக்கணப்பூர்வமாக வார்த்தைகள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும்” அவ்வீட்டின் உரிமையாளர் அன்னா பிரில்லாமேன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஆரம்பத்தில் இக் கடிதங்களை படிப்பது என்பது காதலர்களின் தனி சுதந்திரத்தில் தலையிடுவதாக இருக்கும் என்று அவர் கருதியதாகவும், பின்னர் இக்கடிதங்களின் உரிமையாளர்களைக் கண்டுபிடிக்க விரும்பியதாகவும், இதனால் இது குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்ததாகவும் இதன் மூலம் போலான்டில் உள்ள குறித்த காதல் ஜோடியின் பேரனைச் சந்தித்தாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இச்சந்திப்பின் போது ”அக் காதல் ஜோடி 50 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து மரணித்துள்ளனர் என அவர்களது பேரன் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து வெளியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

48 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
4 hours ago
8 hours ago
8 hours ago