2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

ரஷ்யா எதிர்க் கட்சித் தலைவர் காலமானார்

Mayu   / 2024 பெப்ரவரி 16 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி இன்றைய தினம் (16) உயிரிழந்துள்ளார். புடினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ரஷ்யா சிறையில் அடைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி திடீர் மரணமடைந்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தண்டிக்கப்பட வேண்டும் என்று நவல்னியின் மனைவி யூலியா நவல்யானா வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி(47), அந்நாட்டு ‌ஜனாபதி புதினுக்கு எதிராக பல்வேறு ஊழல் புகார்களைக் கூறி வந்தார்.

இந்த நிலையில் அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கடந்த 2021-ம் ஆண்டு ரஷ்ய அரசு கைது செய்தது. இதையடுத்து, எமலோ நெனெட்ஸ் பிராந்தியத்தில் உள்ள சிறையில் அலெக்ஸி நவல்னி அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் சிறையில் திடீரென மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நவல்னி இறப்பு குறித்து ரஷ்ய சிறைச்சாலை நிர்வாகம் தெரிவிக்கையில், “நடைபயிற்சியில் இருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்து உடனடியாக உயிரிழந்தார்” என்று தெரிவித்துள்ளது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், முனிச் பாதுகாப்பு மாநாட்டில் அவரது மனைவி யூலியா நவல்யானா கலந்து கொண்டார்.

அப்போது அவர், " ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், கிரெம்ளின் மாளிகையில் உள்ள அவரது கூட்டாளிகளும் எனது குடும்பத்திற்கும், நாட்டிற்கும் எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் நம் நாட்டில் அவர்கள் செய்த அனைத்து அட்டூழியங்களுக்கும் இந்த ஆட்சியும், புதினும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதற்கமைய, கடந்த 2021ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா அரசு தெரிவித்துள்ளது.

மேலும், அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .