2025 மே 05, திங்கட்கிழமை

ரஷ்யாவின் கூர்க்ஸுக்குள் அவசர நிலை அறிவிப்பு

Freelancer   / 2024 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்க்ஸுக்குள் உக்ரைன் படையினர் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கிட்டதட்ட 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022அம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது.

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் புடினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் இராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.

இந்த சூழலில் ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்க்ஸுக்குள் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமார் 1,000 உக்ரைன் படையினர் சமீபத்தில் நுழைந்ததாக கூறப்படுகின்ற நிலையில், உக்ரைன் படையினர் அங்கு 4 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கூர்ஸ் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் உக்ரைன் இராணுவத்தின் முயற்சியை ரஷ்யப் படையினர் வெற்றிகரமாக முறியடித்துவருகின்றனர்.

அந்தப் பகுதியில் தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அங்கு போரிட்டு வரும் ரஷ்யப் படையினருக்கு பலம் சேர்ப்பதற்காக கூடுதல் படைப் பிரிவுகள் மற்றும் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூர்க்ஸ் பகுதிக்குள் ஊடுருவிய 280 உக்ரைன் படையினர் கொல்லப்பட்டனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X