Editorial / 2018 மே 22 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு, ரஷ்யாவை நேற்று (21) சென்றடைந்தார். அவரது இவ்விஜயத்தின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன், உத்தியோகபூர்வமற்ற சந்திப்புகளை, அவர் மேற்கொள்ளவிருந்தார்.
இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர் கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, ஜனாதிபதி புட்டினுடனான சந்திப்பை எதிர்பார்த்திருப்பதாகவும், அவரைச் சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சிகரமானது என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, ஜனாதிபதி புட்டினுடனான சந்திப்பு, இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான விசேடமான உறவை மேலும் பலப்படுத்துமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான, ஈரானின் அணுவாயுத வல்லமை தொடர்பான ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கு ஐக்கிய அமெரிக்கா தீர்மானித்துள்ள நிலையில், அது தொடர்பில் அதிக கவனம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல், பூகோள ரீதியான பயங்கரவாதம் தொடர்பாகவும் ஆப்கானிஸ்தான், சிரியா ஆகிய நாடுகளின் நிலைமை தொடர்பாகவும் முக்கிய கவனம் செலுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025