2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

ரஷ்யாவுடன் இணைந்த இந்தியா; அதிர்ச்சியில் உலக நாடுகள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 16 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா, பிரித்தானியா , பிரான்ஸ், ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

இந்நிலையில் இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது. இதற்கான உடன்படிக்கை விரைவில் கையொப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியானது  உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, ”ரஷ்யாவுக்கு  இந்தியா ஆதரவளிப்பது உக்ரேன் மீதான அதன் படையெடுப்பை ஆதரிப்பது போலாகும் என்பதால் வரலாற்றில் எப் பக்கத்தில் நிற்க வேண்டும் என இந்தியா சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .