2025 நவம்பர் 05, புதன்கிழமை

ராகுல் காந்தி போட்டியிடத் தடை கோரிய மனு: விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்

Editorial   / 2019 மே 03 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க, தேர்தல் ஆணைக்குழுவுக்கும், மத்திய அரசாங்கத்துக்கும் உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தது.

குறித்த மனுவை, டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ்ப் தியாகி ஆகியோர் தாக்கல் செய்தனர். அந்தவகையில், உச்ச நீதிமன்ற பிரதமர் நீதியரசர் ரஞ்சன் கோகய், நீதியரசரிகள் தீபக் குப்தான், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் அவசர வழங்காக விசாரிக்கக் கோரி குறித்த வழக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பருன் குமார் சின்ஹா ஆஜராகினார். அவர் தாக்கல் செய்த மனுவில், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரித்தானியக் குடியுரிமையை தாமாக முன்வந்து பெற்றுள்ளார். இதை, 2005, 2006ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பக்கொப்ஸ் நிறுவனத்தில் ஆண்டறிக்கை தாக்கல் செய்தபோது இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, உண்மையான நிலை என்ன என விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு உள்நாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையில் எங்களுக்குத் திருப்தி இல்லை. ராகுல் காந்தி பிரித்தானியக் குடியுரிமையை தாமாக முன்வந்து பெற்றுள்ளார் என்று பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆகையால்ம் பிரித்தானியாவிடம் தாமாக முன்வந்து குடியுரிமை பெற்ற ராகுல் காந்தி, ஒரே சமயத்தில் இந்தியக் குடியுரிமையையும் வைத்திருக்க முடியுமா என்பதை மத்திய அரசாங்கம் முடிவு செய்ய உத்தரவிட வேண்டும்.

மேலும், இங்கிலாந்து குடியுரிமையை தாமாக முன்வந்து பெற்ற ராகுல் காந்தி, அமேதி, வயநாடு நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்க முடியுமா, அவரை நாடாளுமன்றத்தின் அனுமதிக்க முடிய்மா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X