2025 நவம்பர் 05, புதன்கிழமை

ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகள்: மனுத்தாக்கல் செய்தார் நளினி

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக இருந்து வரும் 7 பேரை விடுவிக்கக் கோரி அளித்த மனுவை, பரிசீலிக்க தமிழக அரசாங்கத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று, நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுதலை செய்ய, கடந்த ஆண்டு செப்டெம்பர் 9ஆம் திகதி, தமிழக அமைச்சரவை, ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால், 6 மாதங்கள் கடந்தும் இந்தப் பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை.

அதனால், நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனுவொன்றை அளித்தார். அந்த மனுவில், 7 பேரையும் உடனடியாக, முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி, தமிழக உள்துறைச் செயலாளருக்கும் முதலமைச்சருக்கும், கடந்த பெப்ரவரி மாதம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X