2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

ராணி நலம்பெற மோடி பிரார்த்தனை

Freelancer   / 2022 பெப்ரவரி 21 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்குள்ளான இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

“இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்துள்ளார்.

ராணி 2ஆம் எலிசபெத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை நேற்று உறுதிப்படுத்தி உள்ளது. 

அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரும் வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து பணிகளை செய்வார் எனவும் பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X