Editorial / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலில் இவ்வாண்டு ஒக்டோபரில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடுகின்ற போதிலும், ஊடகங்களின் செய்தி அறிக்கைகளில், தனது பிரசாரம் தொடர்பான செய்திகள் இடம்பெறுவதில்லை என, பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூலா இனாஷியோ லூலா த சில்வா முன்வைத்த முறைப்பாட்டை, அந்நாட்டுத் தேர்தல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக் காரணமாகச் சிறையிலடைக்கப்பட்டுள்ள லூலா த சில்வாவை, அநேகமான ஊடகங்கள் புறக்கணிக்கின்ற நிலையிலேயே, இம்முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தேர்தல் நீதிமன்றத்தின் இம்முடிவு, இத்தேர்தலில் லூலா த சில்வா போட்டியிடலாமா என, அந்நாட்டு உச்சநீதிமன்றம் எடுக்கவுள்ள முடிவுக்கு முன்னோடியாக அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது. சிறைத்தண்டனை காரணமாக, லூலா த சில்வாவால் போட்டியிட முடியாது என்றே, உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
32 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
3 hours ago
4 hours ago