Editorial / 2018 ஜூலை 10 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா த சில்வாவை, சிறையிலிருந்து விடுவிப்பதற்கு நீதிபதியொருவர் எடுத்த முயற்சியை, அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் தடுத்துள்ளார்.
பிரேஸிலின் ஜனாதிபதித் தேர்தல், இவ்வாண்டு ஒக்டோபரில் இடம்பெறவுள்ள நிலையில், அத்தேர்தலில் போட்டியிட்டால், லூலா வெற்றிபெறுவார் என, கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், ஊழல் குற்றச்சாட்டில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு, லூலாவுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டுமென, மேன்முறையீட்டு நீதியரசர் ஒருவர் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, அந்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர், அத்தீர்ப்பைத் தடுப்பு, லூலா தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்துள்ளார்.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago