2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

வகுப்பறைகளில் அலைபேசி தடை

Shanmugan Murugavel   / 2025 ஓகஸ்ட் 28 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளில் வகுப்பு நேரங்களில் செல்லிடத் தொலைபேசிகளையும், திறன் சாதனங்களையும் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டமூலமொன்றை தென்கொரியா நிறைவேற்றியுள்ளது.

2026 மார்ச்சில் அடுத்த பாடசாலை ஆண்டு ஆரம்பிக்கும்போது இச்சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. திறன்பேசி அடிமையாதலைக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்க்கட்சியிலிருந்தும் ஆதரவு கிடைத்திருந்தது.

பிரசன்னமாயிருந்த 163 உறுப்பினர்களில் 115 வாக்குகள் ஆதரவாகக் கிடைத்த நிலையில் புதன்கிழமை (27) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

பெரும்பாலான தென் கொரியப் பாடசாலைகள் ஏற்கெனவே திறன்பேசித் தடையை வெவ்வேறு வடிவங்களில் அமுல்படுத்துகின்றன.

பின்லாந்து, பிரான்ஸ் ஆகியன சிறியளவில் அலைபேசிகளைத் தடை செய்துள்ளன. இளவயது சிறுவர்களின் பாடசாலைகளில் மாத்திரம் கட்டுப்பாட்டை அமுல்படுத்துகின்றன.

இத்தாலி, நெதர்லாந்து, சீனா அனைத்துப் பாடசாலைகளிலும் அலைபேசிப் பாவனையைக் கட்டுப்படுத்தியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .