Editorial / 2026 ஜனவரி 04 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடகொரியாவில் ஜனாதிபதி கிம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சமீபகாலமாக அவரது மகள் அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில் நேற்று அந்நாட்டின் மிக முக்கியமான இடத்திற்கு கிம் தனது மகளை அழைத்து சென்றிருக்கிறார். இதன் மூலம் எதிர் காலத்தில் பவர், கிம் மகளுக்கு வழங்கப்படலாம் என்று பேச்சுக்கள் அடிப்பட்டிருக்கின்றன.
வடகொரியாவை பொறுத்தவரை, கிம் வம்சத்தினர்தான் ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும். அதன்படி தற்போது கிம் ஜாங் உன் தற்போது ஜனாதிபதியாக இருக்கிறார். அவருக்கு அடுத்து யாருக்கு பவர் கைமாறும்? என்பது கேள்வியாக இருந்த நிலையில், அவர் தனது மகள் கிம் ஜு ஏ-வை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறார்.
அந்த வகையில் கிம், தனது மகளை வடகொரியாவின் முன்னோர்களின் கல்லறைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.
இந்த செயல், அரசனின் அரியணைக்கு பக்கத்தில் இன்னொரு இருக்கை போட்டு அமர வைப்பதற்கு சமமாகும். அதாவது வட கொரியாவில் முன்னோர்களின் கல்லறைகள் புனிதமான கோயில்களை போன்றதாகும். அதிபர் இந்த கல்லறைக்கு வருகிறார் எனில், மொத்த ராணுவ தளபதிகளும் இங்குதான் இருப்பார்கள். அப்படியான இடத்திற்கு தனது மகளை கிம் முதன் முறையாக தன்னுடன் அழைத்து சென்றிருக்கிறார்.
இதன் மூலம், தனக்கு பிறகு வடகொரிய ராணுவம் தனது மகளுக்குதான் கட்டுப்பட வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அதேபோல மகள் கிம் ஜு ஏ-வை முன்பெல்லாம் வடகொரிய அரசு ஊடகங்கள் 'அன்புக்குரிய மகள்' என்றுதான் எழுதி வந்தன. ஆனால், இப்போது 'மதிப்பிற்குரிய மகள்' என்றும் 'விண்மீன் தளபதி' என்றும் குறிப்பிட்டு எழுத தொடங்கியுள்ளன. இதெல்லாம் வடகொரியாவின் அதிகாரம் மெல்ல கை மாறி வருகிறது என்பதை உணர்த்துவதாக இருக்கிறது.
இது இல்லாமல் ஏவுகணை சோதனைகள், புத்தாண்டு கொண்டாட்டம், ராணுவ அணிவகுப்புகளிலும் அவர் பங்கேற்று வருகிறார். மட்டுமல்லாது முதன் முறையாக தந்தையுடன் சேர்ந்து, கிம் ஜு ஏ, சீனாவுக்கு சென்றிருக்கிறார். இவை அனைத்தும் வடகொரிய அரசியலின் முக்கிய நகர்வாக இருக்கிறது. விரைவில் கிம் ஜு ஏ வடகொரியாவின் 4வது தலைவராக உருவெடுப்பார் என்று சொல்லப்படுகிறது."
இந்த விஷயத்தில் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. ஒன்று, வடகொரியாவில் வாரிசு அரசியல் தொடர்வது. இது மேற்கு நாடுகளின் விமர்சனங்களுக்கு வழிவகுக்கும். இரண்டாவது விஷயம், வடகொரியா காலம் காலமாக ஆணாதிக்கம் நிறைந்த நாடாக இருந்திருக்கிறது. அங்கு ஒரு பெண் தலைவராக வருவது உண்மையில் வரவேற்கத்தக்கது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
11 minute ago
16 minute ago
18 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
16 minute ago
18 minute ago
18 minute ago