2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

வடகொரிய முக்கிய அதிகாரி சிங்கப்பூரில்

Editorial   / 2018 மே 30 , மு.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னின் முக்கிய அதிகாரியொருவர், சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளார். சீனத் தலைநகர் பெய்ஜிங்கிலிருந்து, சிங்கப்பூர் நேரப்படி நேற்று முன்தினம் (28) இரவு (இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை), சிங்கப்பூரை அவர் சென்றடைந்தார்.

கிம் சாங் சொன் என்ற இந்த அதிகாரி, வடகொரியத் தலைவரின், பணியாட்தொகுதிப் பிரதானியின் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரியாவார். சிங்கப்பூருக்கு இவர் சென்றுள்ளமை, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னுக்கும் இடையிலான சந்திப்பு, எதிர்வரும் 12ஆம் திகதி, சிங்கப்பூரில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அச்சந்திப்பு இடம்பெறாது என, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

ஆனால் அதன் பின்னர், இச்சந்திப்பை நடத்துவது குறித்து இரு நாடுகளும் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், வடகொரியத் தலைவரின் முக்கியமான அதிகாரி, சிங்கப்பூரைச் சென்றடைந்துள்ளமை, முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X