Editorial / 2019 மே 03 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) ஆட்சியை, வானத்திலிருந்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா பார்த்துக் கொண்டிருப்பதாக தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து நேற்று (02) பிரசாரம் மேற்கொண்டபோதே குறித்த கருத்தை அ.இ.அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளருமாருமான ஓ. பன்னீர்செல்வம் வெளிப்படுத்தினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், “நான்கு தொகுதிகள் உட்பட 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.கவே வெற்றி பெறும். அ.இ.அ.தி.மு.கவின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
மக்கள் பணியை மனச்சாட்சிப்படி பார்த்து வருகிறோம். அ.இ.அ.தி.மு.கவை எந்தக் கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழ்நாட்டு மக்களின் அன்பைப் பெற்றது அ.இ.அ.தி.மு.க மட்டுமே.
ஜெயலலிதாவைக் காப்பாற்றாதவர்கள் தனி இயக்கமாக செயல்படுகின்றனர். பொங்கல் பரிசாக 1,000 இந்திய ரூபாய் கொடுத்தது அ.இ.அ.தி.மு.க ஆட்சியில்தான். தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருவது அ.இ.அ.தி.மு.க அரசாங்கம்” என்று கூறினார்.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago