2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாழைப்பழம் உட்கொள்ளக் கட்டுப்பாடு

Ilango Bharathy   / 2022 நவம்பர் 09 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் மீண்டும் கொரோனாத் தொற்றுப் பரவலானது  தீவிரமடைந்து வருகின்றது.

இதன் காரணமாக சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல் படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக பொது போக்குவரத்துக்களில் உணவருந்துவதற்கும்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இக்கட்டுப்பாடுகளைக்  கடைப்பிடிக்கும் விதமாக  சீனாவின் ஹூபே மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் அண்மையில்  ரயிலில், பொலித்தீன் உறையொன்றால் தன்னை மூடிக்கொண்டு, வாழைப்பழம் உட்கொண்டுள்ளார்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணியொருவர் இது குறித்து இணையத்தில் பதிவேற்றியதைத் தொடர்ந்து குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சமீபத்தில், கொரோனா கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக ஷாங்காய் நகரில் உள்ள டிஸ்னிலேண்டின் வாயில்களை சீனா மூடியுள்ளது.

 இதனால், பார்வையாளர்கள் பலரும் உள்ளே சிக்கியுள்ளனர். அதாவது, டிஸ்னிலேண்டில் 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

இதனால், உள்ளே இருப்பவர்களுக்கு கொரோனா இல்லை என பரிசோதனை செய்து உறுதியான பின்னரே விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X