Editorial / 2019 ஜூலை 25 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுட் தண்டனை தீர்ப்புப் பெற்ற நளினி, அவரது மகள் ஹரித்திராவின் திருமணத்துக்காக ஒரு மாத விடுமுறையில் தமிழ்நாட்டின் வேலூரிலுள்ள சிறையொன்றிலிருந்து நேற்று (24) வெளியே வந்திருந்தார்.
பெண் பொலிஸார் புடைசூழ சிறைச்சாலையிலிருந்து வெளியே வந்த அவரை அவரது தாயார் பொறுப்பேற்றிருந்தார். பிரித்தானியாவில் மருத்துவம் கற்றும் ஹரித்திரா, அடுத்த வாரம் நளினியுடன் இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அதிகாரிகளால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி குறித்த ஒரு மாத சிறைவிடுப்பு காலத்தில் வேலூரை விட்டு நளினி வெளியேற முடியாதென்பதோடு, அரசியல்வாதிகளைச் சந்திக்க அனுமதிக்கப்பட மாட்டார் என்பதோடு, ஊடகங்களிடமும் கதைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்காக தான் வாதாடிய விசாரணையொன்றில் இம்மாதம் ஆரம்பத்தில் ஆறு மாத சிறைவிடுப்புக் கோரிய நளினுக்கு மதுரை உயர் நீதிமன்றம் ஒரு மாத சிறைவிடுப்பு வழங்கியிருந்தது. தவிர, பொலிஸ் பாதுகாப்புக்கான செலவீனங்களை நளினி செலுத்துவதிலிருந்தும் நீதிமன்றம் நளினியை விடுவித்திருந்தது.
தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் தீர்ப்பளித்திருந்த நீதிபதிகளில் ஒருவரான எம்.எம். சுந்தரேஷ், அரசாங்க விதிப்படி நளினி அதிகபட்சமாக 30 நாட்கள் சிறைவிடுப்பையே பெறலாம் என அவருக்கு விளங்கப்படுத்தியிருந்தார்.
தனது தந்தையின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்வதற்காக நளினிக்கு கடந்தாண்டு ஒருநாள் சிறைவிடுப்பு சென்னையில் வழங்கப்பட்டிருந்தது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago