Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Freelancer / 2024 ஜூன் 10 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாசா விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ் விமான விபத்தில் மரணமடைந்தார்.
நிலவில் தரையிறங்கியவர் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்று நமக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்னதாகவே அமெரிக்காவின் நாசா 1968 டிசம்பர் 21ம் திகதி நிலவிற்கு அப்பல்லோ 8 என்ற விண்கலத்தை அனுப்பி சோதனை மேற்கொண்டது.
இச்சோதனையில், ஃப்ராங்க் போர்மன், ஜேம்ஸ் லால் மற்றும் வில்லியம் ஆண்டர்ஸ் என்ற விஞ்ஞானிகள் அப்பல்லோ விண்கலத்தில் நிலவுக்கு பயணம் மேற்கொண்டனர்.
ஆனால் அவர்கள் நிலவில் தரையிறங்காமல் நிலவை 10 முறை வலம் வந்தனர். இந்த சோதனை வெற்றியடைந்த பின்னர் தான் நாசா நீல் ஆம்ஸ்ட்ரோங்கை நிலவிற்கு அனுப்பியது.
இதில், அப்பல்லோ 8 விண்கலத்தில் பயணம் செய்த விஞ்ஞானிகளில் ஒருவரான வில்லியம் ஆண்டர்ஸ் என்பவருக்கு தற்பொழுது வயது 90 ஆகிறது. இவர் கடந்த வெள்ளியன்று தனக்கு சொந்தமான விண்டேஜ் விமானப்படையின் (ஒற்றை இயந்திர) T34 என்ற சிறியரக விமானத்தில், வொஷிங்டன் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்கூவர் தீவுகளுக்கிடையே உள்ள சான் ஜூவான் தீவுகளின் ஒரு பகுதியான ஜோன்ஸ் தீவில் பயணம் மேற்கொண்டபொழுது, விமானமானது தலைகுப்புற விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் சம்பவ இடத்திலேயே வில்லியம் ஆண்டர்ஸ் இறந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, விமானத்தை வில்லியம் ஆண்டர்ஸ் இயக்கியதாகவும், இந்த விமானமானது கட்டுப்பாடு இழந்து அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இருப்பினும் விமானத்தில் ஏற்பட்ட கோளாரால் விபத்துக்குள்ளானதா அல்லது வில்லியம் ஆண்டர்ஸ்க்கு ஏதேனும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துகுள்ளானதா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும் இவர் பயணப்பட்டதாக கூறப்பட்ட சிறியவகை விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கும் காணொளி ஒன்று சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago