2024 மே 09, வியாழக்கிழமை

விண்வெளியின் எல்லைக்குச் சென்ற பிரன்சன்

Shanmugan Murugavel   / 2021 ஜூலை 11 , பி.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வேர்ஜின் கலாசிட்டிக் றொக்கெட் விமானத்தில் விண்வெளியின் எல்லையை செல்வதந்தரான சேர் றிச்சர்ட் பிரன்சன் அடைந்துள்ளார்.

பிரித்தானிய தொழில்முயற்சியாளரான பிரன்சன், ஐக்கிய அமெரிக்காவின் நியூ மெக்ஸுக்கோவுக்கு மேலேயே, 17 ஆண்டுகளாக அவரது நிறுவனம் உருவாக்கிய வாகனத்தில் பறந்திருந்தார்.

அந்தவகையில், விண்வெளிச் சுற்றுலாவில் முதலாமவராக தன்னை பிரன்சன் நிலைநிறுத்தியுள்ளார்.

85 கிலோ மீற்றர் உயரத்தை பிரன்சன் அடைந்திருந்தார்.

பிரன்சனுடன், இரண்டு விமானிகளும், மூன்று பணியாளர்களும் பறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டு முதல் வாடிக்கையாளர்களுக்கு இப்பயணங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 250,000 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இப்பயணத்துக்கு 600 தனிநபர்கள் ஏற்கெனவே பணம் செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X