Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள கிராமப் பகுதியொன்றில், உயர்ரக காரொன்று, இன்னொரு வாகனத்தையும் அங்கு சென்ற பாதசாரிகளையும் இடித்துத் தள்ளியதில், 20 பேர் கொல்லப்பட்டனர். நேற்று முன்தினம் (07) இடம்பெற்ற இவ்விபத்தை, கடந்த தசாப்தத்தில், ஐ.அமெரிக்க வரலாற்றின் மோசமான போக்குவரத்து விபத்து என, அதிகாரிகள் வர்ணித்தனர்.
இவ்விபத்தின் போது, காருக்குள் காணப்பட்ட 18 பேரும் கொல்லப்பட்டதோடு, மேலும் இருவர், வாகனம் நிறுத்திவைக்கப்படும் இடத்தில் வைத்துக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தோரில், புதிதாகத் திருமணம் முடித்த இரண்டு ஜோடிகளும், நான்கு சகோதரிகளும் உள்ளடங்குகின்றனர் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
41 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
56 minute ago
1 hours ago