2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விமான உணவில் உயிருடன் எலி

Freelancer   / 2024 செப்டெம்பர் 23 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நோர்வேயில் இருந்து ஸ்பெயினுக்கு சென்ற விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில், உயிருடன் எலி கிடந்ததால் பயணியர் பீதியடைந்தனர்.

ஐரோப்பிய நாடான நோர்வேயின் ஓஷ்லோவில் இருந்து மற்றொரு ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் மாலகாவுக்கு, ஸ்கான்டினேவியன் ஏர்லைன்ஸ் என்ற பயணியர் விமானம் நேற்று சென்றது. நடுவானில் பயணியருக்கு உணவு வழங்கப்பட்டது.

அதில் ஒரு பெண் பயணிக்கு வழங்கப்பட்ட உணவு பார்சலில் இருந்து திடீரென வெளியேறிய எலி, விமானத்திற்குள் குதித்தது. இதனால், பயணியர் அதிர்ச்சியடைந்தனர்.

தப்பிய எலியை தீவிரமாக தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து, டென்மார்க்கின் கோபன்ஹேகன் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கினர். பின்னர், அனைத்து பயணியரும் வேறு விமானத்தில் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், உணவில் எலி கிடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரிய விமான நிறுவனம், இதுபோன்ற நிகழ்வு இனி நிகழாது எனவும் உறுதி கூறியுள்ளது. பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் உயிருடன் எலி வந்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடக்கிறது.S

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X