Editorial / 2019 ஜூன் 10 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாயமான இந்திய விமானம் பற்றியத் தகவல் வழங்குவோருக்கு, 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என, விமானப்படை அறிவித்துள்ளது.
விமானத்தை தேடும் பணிகளை, நேற்று (09), 7ஆவது நாளாக விமானப்படை முன்னடுத்த போதிலும், எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்நிலையில் மாயமான விமானம் குறித்து தகவல்களை வழங்குபவர்களுக்கு 5 இலட்சம் இந்திய ரூபாய் சன்மானமாக வழங்கப்படுமென இந்திய விமான படையின் எயார் மார்ஷல் ஆர்.டி.மாத்தூர் அறிவித்துள்ளார்.
அசாம் மாநிலம்- ஜோர்கத் விமானப்படை தளத்திலிருந்து அருணாச்சல பிரதேசத்தின் மெஞ்சுகா பகுதியை நோக்கி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படையின் ஏ.என்-32 ரக விமானம் கடந்த 4ஆம் திகதி, 13 பேருடன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
9 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
17 minute ago