Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 17 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘கறுப்பு உருவம் ஒன்று தன்னை துரத்துவதாகக் கூறி’ மாணவியொருவர் பாடசாலை மாடியில் இருந்து குறித்து கால்களை முறித்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் பாடசாலையொன்றில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியொருவரே இவ்வாறு பாடசாலையின் முதலாம் மாடியில் இருந்து குதித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று பாடசாலை சக மாணவிகள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அம்மாணவி மாத்திரம் பாடசாலையின் முதலாம் மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.
இதில் மாணவியின் இரு கால்களிலும் எலும்புகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மாணவி உடனடியாக முச்சக்கர வண்டியில் வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இரு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் நடத்திய விசாரணையில் மாணவி அளித்த தகவல்கள் பொலிஸாரைத் திகிலடையச் செய்துள்ளது.
விசாரணையின் போது ”கடந்த ஒரு மாதமாகத் தன்னைக் கறுப்பு உருவம் ஒன்று பின் தொடர்வதாகவும், சம்பவத்தன்று குறித்த கறுப்பு உருவம் தன்னுடன் விளையாடியதாகவும், தன்னை தனியாக பாடசாலை மாடிக்கு அழைத்துச்சென்ற அந்த உருவம் இருவரும் சேர்ந்து குதித்து விளையாடலாம் என்று கூறியதால் அதன் பேச்சை கேட்டு தான் மாடியில் இருந்து குதித்ததாகவும், கீழே விழுந்த பின்னர் மேலே பார்த்தால் அந்த கருப்பு உருவம் குதிக்காமல் தன்னை ஏமாற்றி விட்டது என்றும் கூறியுள்ளார்.
மேலும் பொலிஸார் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே ”அங்கே பாருங்கள் அந்த உருவம் தான், ஜன்னல் அருகில் இருந்து என்னை அழைக்கின்றது பாருங்கள்” என்று திகிலூட்டியுள்ளார்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்றதாக 309 ஆவது சட்டப்பிரிவின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் மாணவியின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனோ தத்துவ நிபுணர் மூலம் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
24 minute ago
50 minute ago