2025 நவம்பர் 05, புதன்கிழமை

விரல் உயர்த்தினால் ’கை துண்டிப்பு’ சர்ச்சையில் சிக்கினார் சத்பால்

Editorial   / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மோடியையோ, பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர்களையோ எதிர்த்து, யாராவது விரலை உயர்த்திப் பேசினால், கைகளைத் துண்டிப்போம் என்று, இமாச்சலப் பிரதேசத்தின் பா.ஜ.க தலைவர் சத்பால் சிங் சத்தி கூறியுள்ளமை, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில், இன்னும் 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெறவேண்டியுள்ளது. இதையொட்டி முன்னெடுக்கப்பட்ட பிரசாரக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து சர்ச்சைக் கருத்தை ​வெளியிட்டிருந்த அவர், ஏற்கெனவே இவ்வாறு சர்ச்சையில் சிக்கியிருந்தார்.

பிரதமர் மோடியை திருடன் என்று, ராகுல்காந்தி கூறியதற்காக, அவரைக் கடுமையான வார்த்தைகளில் சத்பால் சிங் விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து, ராகுல் காந்தியைப் பற்றி அவதூறாக பேசியதற்காக, 48 மணிநேரம் பிரசாரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தடைக்குப் பின்னர், மீண்டும் சர்ச்சையான கருத்தை இவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X