2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

விவாதத்திலிருந்து நழுவிய டிரம்

Freelancer   / 2024 செப்டெம்பர் 22 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ஜனநாயக கட்சியின் போட்டியாளரான கமலா ஹாரிசுடன் 2வது ஜனாதிபதி விவாதத்தில் பங்கேற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.

முதல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என பல அமெரிக்க ஊடகங்கள் அறிவித்ததால், தற்போது டிரம்ப் நழுவி விட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான தேர்தல், நவ.,5ஆம் திகதி நடக்கவுள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர்.

இருவரும் முதன்முறையாக செப்., 11இல், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். இந்த விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

டிரம்ப் ஆதரவாளர்களே கமலா தான் வெற்றி பெற்றார் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க துணை ஜனாதிபதியும், ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயக கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸ், அக்டோபர் 23ஆம் திகதி குடியரசுக் கட்சியின் போட்டியாளரான டொனால்ட் டிரம்புடன் 2வது விவாதத்தில் பங்கேற்க உள்ள அழைப்பை ஏற்றுக்கொண்டேன் என தெரிவித்தார்.

ஆனால், “நவம்பர் 5ஆம் திகதி நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்கள் தயாராகி விட்டனர். 2வது விவாதம் மிகவும் தாமதமாகிவிட்டது” எனக் கூறி டிரம்ப் அழைப்பை நிராகரித்தார்.

இதற்கிடையே, முதல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் பல அமெரிக்க ஊடகங்கள் அறிவித்ததால், தற்போது டிரம்ப் பயந்து நழுவி ஓடிவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X