2025 நவம்பர் 05, புதன்கிழமை

வீடு, வீடான மோதல்களில் முன்னேற்றமடைகின்றன அரசாங்க ஆதரவுப் படைகள்

Editorial   / 2019 ஏப்ரல் 30 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபிய தேசிய இராணுவத்துடன், லிபியத் தலைநகர் திரிபோலியின் தென் பகுதிகளில் வீடு, வீடாக மோதலில் நேற்று முன்தினம் ஈடுபடுகின்ற தேசிய இணக்க அரசாங்கத்துக்கு ஆதரவான படைகள் முன்னேற்றத்தை அடைவது போலத் தோன்றுகிறது.

அந்தவகையில், திரிபோலியின் தென் புறநகரான ஐன் ஸராவுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த றொய்ட்டர்ஸ் அணியொன்று, தேசிய இணக்க அரசாங்கத்துக்கு ஆதரவான படைகள், சில நாட்களுக்கு முன்னர் விஜயம் செய்திருந்ததை விட 1,500 மீற்றர் வரை முன்னேறியுள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், முன்னரங்கின் ஏனைய பகுதிகள் மாற்றமில்லாது போலத் தோன்றுவதுடன், நிலமையானது சீரற்றே காணப்படுகின்றது. நாளொன்றில் அல்லது மணித்தியாலங்களில் மோதலின்போது இரண்டு தரப்புகளும் பிராந்தியத்தைக் கைப்பற்றுவதுடன் இழக்கவும் செய்கின்றன.

அந்தவகையில் கருத்துத் தெரிவித்த லிபிய தேசிய இராணுவத்துடன் போரிடுகின்ற லிபிய மேற்கு நகரமான மிஸ்ரட்டாவின் தளபதியொருவரான சாலா பாடி, தாங்கள் முன்னேறுவதாகவும், திரிபோலியிருந்து எதிரியை வெளியேற்றும் கட்டத்தில் தாங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், சாலா பாடி போன்ற தளபதிகளின் வகிபாகத்தால் நிலைமை சிக்கலாகியுள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர். வாரக்கணக்கான மோதலைத் தோற்றுவித்த தேசிய இணக்க அரசாங்கத்தின் படைகள் மீதான 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் தாக்குதலில் சாலா பாடியின் வகிபாகம் காரணமாக, அவருக்கெதிரான ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையும், ஐக்கிய அமெரிக்க திறைசேரியில் கடந்தாண்டு சொத்து முடக்கத்தை அறிவித்திருந்ததுடன், பயணத் தடையையும் அறிவித்திருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X